சத்துணவு பணியாளர்களுக்கான கலந்தாய்வ ஆலோசனைக் கூட்டம்
சத்துணவு பணியாளர்களுக்கான கலந்தாய்வ ஆலோசனைக் கூட்டம்
UPDATED : நவ 21, 2026 04:34 PM
ADDED : நவ 21, 2026 04:34 PM

அ நிறம் | அளவு
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர்கள், உணவு பாதுகாப்பு துறையினர் கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்குட்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பி.டி.ஓ., உமா தலைமை தாங்கினார். சத்துணவு துணை பி.டி.ஓ. ரத்தினவேல் முன்னிலை வகித்தார். வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் முத்தையன், சுகாதார ஆய்வாளர் அன்பரசன் பேசினர்.
இதில் சத்துணவு சமையல் செய்யும் போது பாதுகாப்பாகவும், தரமான முறையிலும் தயாரிப்பது குறித்தும், சமையலர்கள், உதவியாளர்களின் பொறுப்புகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
கூட்டத்தில் தீயணைப்பு துறையினர் மற்றும் சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
