ADDED : செப் 19, 2026 06:35 PM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னையில் கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருத்தாசலம் வீரபாண்டியன் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்,37; காய்கறி மார்க்கெட்டில் மூட்டை துாக்கும் தொழிலாளி. இவரது மனைவி அஞ்சலி. திருமணமாகி 16 ஆண்டாகும் இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை அஞ்சலி, மணிகண்டனுக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டார். ஆனால், அவரது மொபைல் போன் பிசியாக இருந்தது.
இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த மணிகண்டன், தனது சகோதரர் சின்னையனுக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார்.
உடன், மாரி ஓடை பின்புறம் உள்ள கொட்டகையில் துாக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்த மணிகண்டனை, அங்கிருந்தவர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
