ADDED : டிச 04, 2025 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மின்னல் தாக்கி பசு, கன்று பரிதாபமாக இறந்தது.
விருத்தாசலம் அடுத்த காட்டுப்பரூர் குப்புசாமி மகன் ராமு என்பவர், தனக்கு சொந்தமான பசு மாட்டை நேற்றிரவு வழக்கம் போல வீட்டின் பின்புறம் கட்டிவிட்டு துாங்க சென்றார்.
அதிகாலை 3:00 மணியளவில், பலத்த மின்னலுடன் கூடிய கனமழை பெய்தபோது பசு மாடு மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்தது.
இதேபோல், சாத்துக்கூடல் கீழ்பாதி ஊராட்சி, உச்சிமேடு வனராஜன் என்பவருக்கு சொந்தமான 1 வயது மதிக்கத்தக்க கன்றுக்குட்டி மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்தது. இது தொடர்பாக, விருத்தாசலம் தாசில்தார் அரவிந்தன் தலைமையிலான வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

