ADDED : நவ 24, 2025 06:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில்: அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து பசு மாடு இறந்தது.
காட்டுமன்னார்கோவில் அடுத்த கந்த குமாரன் கிராமம் அண்ணா பாலம் பஸ் நிறுத்தம் அருகே சின்னமணல்மேடு கிராமத்தைச் சேர்ந்த சேட்டு என்பவரின் சினைமாடு நேற்று மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது, மழையின் காரணமாக சாலையின் கீழே அறுந்து கிடந்த மின் கம்பியை மாடு மிதித்தது.
இதில், மின்சாரம் தாக்கியதில் மாடு பரிதாபமாக இறந்தது.

