ADDED : அக் 26, 2024 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாலத்தில் மின்சாரம் தாக்கி பசுமாடு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் செல்வம். இவரது பசுமாடு நேற்று பகல் 11:00 மணியளவில், அண்ணா நகர் மெயின் ரோடு பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரை கடந்து செல்ல முயன்றது. அப்போது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பசுமாடு இறந்தது.
இதையறிந்த மாட்டின் உரிமையாளர் சம்பவ இடத்திற்கு வந்து, மாட்டை பார்த்து கதறி அழுதார். , தகவலறிந்து வந்த மின்துறை ஊழியர்கள் மாடு பலியான இடத்தை சோதனை செய்தனர். அப்போது, மின்சாரம் தாக்கி பசுமாடு இறக்கவில்லை என கூறினர்.
பசுமாடு மின்சாரம் தாக்கி இறந்ததா அல்லது வேறு காரணமா என, விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.