ADDED : அக் 22, 2025 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: கனமழை காரணமாக பனைமரம் விழுந்து, பசு மாடு இறந்தது.
புதுச்சத்திரம் அடுத்த மணிக்கொல்லையை சேர்ந்தவர் ராஜலட்சுமி, 40; இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து, வருகிறார்.
நேற்று அதிகாலை சுமார் 5.45 மணிக்கு, இப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, அவரது வீட்டின் அருகே இருந்த, பனைமரம் முறிந்து பசு மாட்டின் மீது விழுந்ததால், பசு மாடு சம்பவ இடத்திலேயே இறந்தது.
தகவலறிந்த கால்நடைத் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்த ஆய்வு செய்தனர்.