ADDED : ஏப் 04, 2025 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையத்தில் கிணற்றில் விழுந்த மாட்டினை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் பட்டீஸ்வரத்தை சேர்ந்தவர் ராஜாராம்.இவரது நிலத்திற்கு மேய்ச்சலுக்கு சென்ற சி.என்.பாளையம் எம்.ஜி.ஆர்.,நகரை சேர்ந்த வீரப்பன் என்பவரின் மாடு, அங்கிருந்த தரை கிணற்றில் தவறி விழுந்தது.
நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வுந்து, கிணற்றில் விழுந்த மாட்டை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.