/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலையில் திரியும் மாடுகள்; வாகன ஓட்டிகள் அவதி
/
சாலையில் திரியும் மாடுகள்; வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூன் 04, 2025 08:49 AM

புவனகிரி; புவனகிரி பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் அதிகளவு விபத்துகள் நடக்கிறது.
புவனகிரி வீதிகளில், குறிப்பாக போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் மாடுகளால் எந்நேரமும் சுற்றித் திரிகிறது. சில நேரங்களில் மாடுகள் மிரண்டு ஓடுவதால் விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. சாலையில் நடுவே நிற்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு பல முறை புகார் கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இனியாவது சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

