ADDED : நவ 01, 2024 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன். நேற்று மதியம் பட்டாசு நெருப்பு விழுந்து இவரது கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சென்று, பொது மக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர்.
அதில் வீட்டிலிருந்த துணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.