/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிரிக்கெட் போட்டி எம்.எல்.ஏ., பரிசளிப்பு
/
கிரிக்கெட் போட்டி எம்.எல்.ஏ., பரிசளிப்பு
ADDED : ஆக 04, 2025 07:24 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி கிராமத்தில், கிரிக்கெட் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ரெங்கசாமி தலைமை தாங்கினார்.
மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், மாவட்ட துணை செயலாளர் செல்வம், ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர் சுதாகர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் திருஞான சம்பந்தமூர்த்தி வரவேற்றார். பாண்டியன் எம்.எல்.ஏ., போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.
விழாவில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரவி, கிளை செயலாளர்கள் சக்திவேல், சுப்ரமணியன், இளஞ்செழியன், செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.