sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கிரைம் செய்திகள்

/

கிரைம் செய்திகள்

கிரைம் செய்திகள்

கிரைம் செய்திகள்


ADDED : நவ 03, 2024 06:56 AM

Google News

ADDED : நவ 03, 2024 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

த.வெ.க., நிர்வாகிகள் மீது வழக்கு

தமிழக வெற்றிக்கழக மாநாடு சமீபத்தில் விக்கிரவாண்டியில் நடந்தது. இது குறித்து அக்கட்சி நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் பேனர் வைத்தனர். புவனகிரி அடுத்த அழிச்சிகுடி தனியார் பெட்ரோல் பங்க் அருகில் ஒன்றிய இளைஞரணி தலைவர் மோகன்ராஜ், புவனகிரி பங்களா அருகில் நகர மாணவரணி செயலாளர் அமுது மற்றும் நகர மாணவரணி தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் தனித்தனியாக அனுமதி இல்லாமல் பேனர் வைத்தனர். இதுகுறித்து புவனகிரி போலீசார் மூவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தாய் மாயம்: மகன் புகார்

கிள்ளை அடுத்த முடசல்ஓடை கிராமத்தை் சேர்ந்தவர் சத்யா, 49; இவரது மகன் ஸ்ரீராம், தாய் சத்யாவிடம், வெளிநாட்டில் இருந்தபோது பணம் குறித்து கணக்கு கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சத்யா கடந்த மாதம் 22ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவரை காணவில்லை. ஸ்ரீராம் கொடுத்த புகாரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தட்டிகேட்டவர் மீது தாக்கு

பண்ருட்டி அடுத்த கந்தன்பாளையம் காமாட்சிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரத்தினவேல். இவர் கடந்த 31ம் தேதி இரவு வீட்டு அருகே ராமு என்பவர் வீட்டு முன்பு பேசிக்கொண்டிருந்தார். அப்போது இதே பகுதியை சேர்ந்த வினோத், கார்த்தி, ரகு, விக்னேஷ் ஆகிய 4 பேரும் பட்டாசு வெடித்ததனர்.

இதனை தட்டிகேட்ட ரத்தினவேலுவை, நால்வரும் சேர்ந்து தாக்கினர். காயமடைந்த ரத்தினவேல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வினோத், கார்த்திக், ரகு, விக்னேஷ் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

வட மாநில பெண் மாயம்

ஒடிசா மாநிலம், பிளான்ஸ்வர் அஜய்ஜன்னா மகன் அலோக் ஜன்னா, 29. இவர் மனைவி ராஷ்மிகா, 20, மற்றும் 8 மாத குழந்தையுடன், விருத்தாசலம் அடுத்த சின்னபண்டாரங்குப்பம் கிராமத்தில் தங்கி, அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை மளிகை கடைக்கு சென்று வருவதாக கூறி சென்ற ராஷ்மிகா திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது கணவர் புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வாலிபர் பல் உடைப்பு: மூவருக்கு வலை

மங்கலம்பேட்டை அடுத்த கொக்காம்பாளையம் பஞ்சாட்சரம் மகன் வீரபாண்டியன், 29. முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன்கள் ராஜசேகர், வீரமணி, சுப்ரமணியன் மகன் சங்கர் ஆகியோர் வீரபாண்டியனை தாக்கி, அவரது பற்களை உடைத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.

வீரபாண்டியன் புகாரின் பேரில், ராஜசேகர் உட்பட மூவர் மீது ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து தேடி வருகின்றனர்.

வடமாநில தொழிலாளி சாவு

பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டி கிராமத்தில் உள்ள ஓரியண்டல் கம்பெனியில் பீகார் மாநிலம், வைசாலி மாவட்டத்தை சேர்ந்த சர்வண்குமார் மிஸ்ரா,44; என்பவர் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் அவருக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். அங்கிருந்த சக தொழிலாளிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழியிலேயே சர்வண்குமார் மிஸ்ரா இறந்தார்.

பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.

வாலிபர் சரமாரி தாக்கு: 6 பேர் கைது

புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சாமிதுரை மகன் செல்வதுரை, 28; அதே பகுதியை் சேர்ந்த நண்பர்களுடன் பி.உடையூர் பஸ் நிறுத்தம் அருகே மது அருந்தியுள்ளார். அங்கு வந்த பி.உடையூரை சேர்ந்த சரவணமூர்த்தி, 26; கவிவர்மன், 21; அன்புராஜ், 24; கதிர்வர்மன், 25; பிரேம்குமார், 25; விக்ரமன்,24; ஆகியோர், எங்கள் ஊரில் ஏன் வந்து மதுக்குடிக்கின்றீர்கள் என, தட்டி கேட்டனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில், செல்வதுரையை சரவணமூர்த்தி உட்பட 4 பேரும் சேர்த்து தாக்கியுள்ளனர். காயமடைந்த செல்வதுரை சிதம்பரம் மருத்துவக்கல்லுாரியில் சேர்க்கப்பட்டார்.

புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து, சரவணனமூர்த்தி உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

முன்விரோத மோதல்: 5 பேர் மீது வழக்கு

மங்கலம்பேட்டை அடுத்த குருவன்குப்பத்தை சேர்ந்தவர் நீதிராஜன், 41. அங்குள்ள கோவிலில் மண்டல அபிேஷகம் நடத்துவது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சிலருடன் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தபோது, ஜெயபால் உள்ளிட்டோர் நீதிராஜனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், ஜெயபால் உட்பட 5 பேர் மீது ஆலடி சப் இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

மாடு மேய்ந்த தகராறு: 11 பேர் மீது வழக்கு

மங்கலம்பேட்டை அடுத்த கொக்காம்பாளையம் சரத்குமார் மனைவி வைதேகி. இவரது மாமனார் நாகப்பன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த வசந்தி என்பவரது அம்மாவுக்கு சொந்தமான நிலத்தை கிரயம் பெற்று, பயிரிட்டு வருகிறார்.

அதில், வசந்திக்கு சொந்தமான மாடுகள் மேய்ந்து தொடர்பாக இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இருதரப்பு புகார்களின் பேரில், வைதேகி, வசந்தி உட்பட 11 பேர் மீது ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

பைக் விபத்தில் வாலிபர் காயம்

குள்ளஞ்சாவடி அடுத்த அன்னதானம்பேட்டை, மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர், செல்வம், 38. இவரது மகன், கலைவாணன், 24. பெயிண்டர். இவர் தீபாவளியன்று குள்ளஞ்சாவடி-ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் பைக்கில் சென்றார். எதிரே வந்த மற்றொரு பைக் மோதி கலைவாணன் படுகாயமடைந்தார். உடன் புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us