sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கிரைம் செய்திகள் கடலுார்

/

கிரைம் செய்திகள் கடலுார்

கிரைம் செய்திகள் கடலுார்

கிரைம் செய்திகள் கடலுார்


ADDED : மார் 30, 2025 04:50 AM

Google News

ADDED : மார் 30, 2025 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளி மாணவி மாயம்

வடலுார்: உய்யகொண்டராவி பகுதியை சேர்ந்தவர் தர்மசிவம் மகள் சுகந்தி,19; சேப்பாளநத்தம் உயர்நிலை பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். நேற்று முன்தினம் மருதுாரில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு செல்வதாக கூறியவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. புகாரின் பேரில் வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

கார் மோதி முதியவர் காயம்

வடலுார்: நெத்தனாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 61; நேற்று முன்தினம் வடலுார் மசூதி அருகே சைக்கிளில் கடலுார்-விருத்தாச்சலம் நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது கடலுார் நோக்கி வந்த கார், சைக்கிள் மீது மோதியது. இதில், காயமடைந்த ஆறுமுகம் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வடலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தகராறில் 4 பேர் மீது வழக்கு

நடுவீரப்பட்டு: சூரியன்பேட்டையை சேர்ந்தவர் ஜோதி,46; இவரது தந்தை சுப்பரமணியனுக்கும், அதே பகுதி ஆதிமூலம்,50; என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக பிரச்னை உள்ளது.

சுப்ரமணியன் தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது ஆதிமூலம், சகோதரர் பாஸ்கர் வழிமறித்ததால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது.

இருதரப்பு புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார், ஜோதி, சுப்ரமணியன், ஆதிமூலம், பாஸ்கர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

பெண்ணை ஏமாற்றியவர் கைது

புவனகிரி: உடையூர் ரோட்டுத் தெருவைச் சேர்ந்தவர் கந்தவேல் மகன் பாலாஜி,26; பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியர். இவர், 19 வயது இளம்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி நெருங்கி பழகினார்.

இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதற்கு பாலாஜி மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில், புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து, பாலாஜியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us