sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கிரைம் செய்திகள்...

/

கிரைம் செய்திகள்...

கிரைம் செய்திகள்...

கிரைம் செய்திகள்...


ADDED : ஏப் 11, 2025 05:57 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணல் கடத்தியவர் கைது


மங்கலம்பேட்டை அடுத்த ஆலடி சப் இன்ஸ்பெக்டர் துரைகண்ணு தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, கொக்காம்பாளையம் வழியாக மாட்டு வண்டியில் மணல் கடத்திச் சென்ற கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த ஆரியநத்தம் ஏழுமலை மகன் செந்துாரபாண்டியன், 31; என்பவரை கைது செய்து மணலுடன் மாட்டு வண்டி பறிமுதல் செய்தனர்.

மாணவி மாயம்: போலீஸ் விசாரணை


நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரத்தைச் சேர்ந்தவர் ஷாலில் ரகுமான், 55; இவரது மகள் நஷ்வத் நியாதி, 23; கடலுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் எம்.எஸ்சி.,இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரை கடந்த 8ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

எஸ்.ஐ.,க்கு மிரட்டல் விடுத்தவர் கைது


கடலுார், புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் கவியரசன், நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வெள்ளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் ஜெய்பீம்தாசன், 30; ரோட்டில் நின்று ஆபாசமாக பேசிக்கொண்டிருந்தார். எச்சரித்த கவியரசனையும் ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் கவியரசன் அளித்த புகாரின் பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து ஜெய்பீம்தாசனை கைது செய்தனர்.

பெண்ணிடம் வழிப்பறி: ஒருவர் கைது


கடலுார், செம்மண்டலத்தைச் சேர்ந்தவர் அன்பு மனைவி கற்பகம், 30; இவர் நேற்று முன்தினம் இரவு ஆல்பேட்டை சோதனைச் சாவடி அருகே மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஒரே பைக்கில் வந்த 3 பேர் கற்பகத்திடமிருந்து மொபைல் போனை பறித்துச் சென்றனர். புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து மொபைல் போனை பறித்துச்சென்றது சேடப்பாளையம் துரைக்கண்ணு மகன் பிரகாஷ், 24; என்பவரை கைது செய்து மொபைல் போனை பறிமுதல் செய்தனர். மேலும், அருள், இந்திரஜித் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

மூதாட்டியை தாக்கியவர் மீது வழக்கு


வடலுார் அடுத்த ஆபத்தாரணபுரம், பாட்டை வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி அந்தோணியம்மாள், 70; அதே பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இருவரது குடும்பத்தினருக்குமிடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் வெங்கடேசன், அவரது மனைவி மலர் ஆகியோர் அந்தோணியம்மாளை திட்டி, தாக்கினர். புகாரின் பேரில் அந்தோணியம்மாளை தாக்கிய வெங்கடேசன், மலர் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கூழாங்கல் கடத்திய லாரி பறிமுதல்


ஆலடி சப் இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு தலைமையிலான போலீசார் நேற்று வீராரெட்டிக்குப்பம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்ததில், கூழாங்கற்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது. ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, கொட்டாரக்குப்பம் லாரி டிரைவர் ஜோதி மகன் சந்துரு, 22; என்பவரை கைது செய்தனர்.

'மாஜி' ஊராட்சி தலைவரை திட்டியவர் மீது வழக்கு


குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன் பேட்டையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 65; முன்னாள் ஊராட்சி தலைவர். நேற்று முன்தினம் இவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில், இருந்தபோது, காட்டுக்கூடலுார் பகுதியைச் சேர்ந்த வைத்தியநாதன் மகன் வெங்கடேசன், 21; என்பவர், ராமச்சந்திரனை ஆபாசமாக திட்டி, தாக்க முயன்றார். புகாரின் பேரில் வெங்கடேசன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொழிலாளி தற்கொலை


புவனகிரி அடுத்த அழிச்சிக்குடியைச் சேர்ந்தவர் அழகர்சாமி, 35; கூலித்தொழிலாளி. திருமணமாகி 7 மற்றும் 4 வயதில் 2 பிள்ளைகள் உள்ளனர். அழகர்சாமி அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் மீண்டும் வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர், பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடன், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

சிறுமி திருமணம்: கணவர் மீது 'போக்சோ'


புவனகிரி அடுத்த பு.உடையூரைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகன் சந்துரு, 22; இவர், 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிறுமி கர்ப்பமடைந்து பிரசவ வலி ஏற்பட்டதால், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் மருத்துவ சோதனையில் சிறுமி என்ற விபரம் தெரியவந்தது. மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், புவனகிரி போலீசார் சிறுமியிடம் புகார் பெற்று, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, தலைமறைவான சந்துருவை தேடி வருகின்றனர்.

வாலிபரை தாக்கியவர் கைது


ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்தவர் பாலதுரை. ஆட்டோ டிரைவர். மேல்புளியங்குடி ராம்குமார், 27; இவர், கடந்த மாதம் 16ம் தேதி அவரது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராம்குமாருக்கும், பாலதுரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராம்குமார், பாலதுரை வீட்டிற்கு சென்று தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். பாலதுரை அளித்த புகாரின் பேரில், ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிந்து, ராம்குமாரை நேற்று கைது செய்தனர்.

கடை சேதம்: 3 பேர் மீது வழக்கு


பாலுாரைச் சேர்ந்தவர் தண்டபாணி, 55; இவர், பாலுார் கடைவீதியில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் ரவிச்சந்திரன், தமிழ்ச்செல்வன், நவீன்குமார் ஆகிய 3 பேரும் தண்டபாணி கடைக்கு எதிரில் நின்று ஆபாசமாக பேசியதை தண்டபாணி தட்டிக் கேட்டார். ஆத்திரமடைந்த 3 பேரும் தண்டபாணியை தாக்கி, கடையை சேதப்படுத்தினர். புகாரின் பேரில், ரவிச்சந்திரன், தமிழ்ச்செல்வன், நவீன்குமார் ஆகிய 3 பேர்மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தகராறில் 8 பேர் மீது வழக்கு


நடுவீரப்பட்டு அடுத்த கொடுக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அமுர்தலிங்கம், 39; மாயக்கண்ணன், 50; இருவருக்குமிடையே பொது மோட்டாரிலிருந்து பைப் லைன் இழுப்பதில் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் அமுர்தலிங்கம் மோட்டாரிலிருந்து புதியதாக பைப் லைன் போடும் வேலையை துவங்கினார். இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இரு தரப்பு புகாரின் பேரில், அமுர்தலிங்கம், மாயகிருஷ்ணன் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வாகனம் மோதி பெண் பலி


விருத்தாசலம், அண்ணாநகரைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம் மகள் விஜயா, 54; திருமணமாகாத இவர், தனது சகோதரர் வெங்கடேஷ் பராமரிப்பில் வசித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தம் நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், படுகாயமடைந்த அவர், அதே இடத்தில் இறந்தார். விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மகள் மாயம்: தந்தை புகார்


அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 17 வயதுடைய சிறுமி, திட்டக்குடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, அரசு கல்லுாரியில் படித்து வருகிறார். இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

இளம்பெண் மாயம்: போலீஸ் விசாரணை


விருத்தாசலம் அடுத்த கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி, 33; இவரது மனைவி ரம்யா, 25; முத்துக்குமாரசாமி ஈரோட்டில் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்றிருந்தார். இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த 20 நாட்களுக்கு முன் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் முதல் குழந்தையுடன் ரம்யாவை காணவில்லை. மேலும், ஆதார் கார்டு, மொபைல்போன் மற்றும் வீட்டுமனைப்பட்டா ஆகியவற்றையும் எடுத்துச் சென்றது தெரிந்தது. முத்துக்குமாரசாமி அளித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மனை தகராறு: 3 பேர் மீது வழக்கு


வடலுார் அடுத்த ரோட்டு ஆண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சங்கர் மற்றும், தியாகராஜன். இவர்களுக்கு இடையே மனை தொடர்பான தகராறு இருந்து வந்தது. நேற்று அவர்களுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். சமதானம் செய்த அதே பகுதியை சேர்ந்த சுப்பையன், 59; என்பவரையும் தாக்கினர். இதுகுறித்து சுப்பையன் அளித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட சரவணன், 23; தியாகராஜன், 27; சண்முகம் ஆகிய, 3 பேர் மீது வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us