தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

சரித்திர பதிவேடு குற்றவாளி கைது


UPDATED : அக் 02, 2026 01:19 AM

ADDED : அக் 02, 2026 01:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 01:19 AM ADDED : அக் 02, 2026 01:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திட்டக்குடி: பொது மக்களிடம் தகராறு செய்த சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

திட்டக்குடி அடுத்த நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் ராதா மகன் செல்லதுரை, 23. இவர் கடந்த ஏப்ரல் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை திட்டி, மானபங்கம் செய்துள்ளார். இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

ஜாமினில் வெளியே வந்த இவர், தொடர்ந்து அப்பகுதியில் சண்டை உள்ளிட்ட பிரச்னை செய்து வந்தார். அதனையொட்டி, அவரது ஜாமினை ரத்து செய்ய போலீசார், திட்டக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மனு அளித்தனர். அதனையேற்று, செல்லதுரையின் ஜாமினை ரத்து செய்து, நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி செல்லதுரையை கைது செய்தனர். இவர் மீது ஒரு கொலை வழக்கு, 4 சண்டை வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us