ADDED : ஜூலை 01, 2026 12:31 AM

அ நிறம் | அளவு
காட்டுமன்னார்கோவில்: மீன்வளர்ப்பு குளத்தில் கிடந்த முதலை குட்டியை வனத்துறையினர் பிடித்தனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த கீழ கஞ்சங்கொல்லையை சேர்ந்தவர் பாண்டியன். இவர் மாரியம்மன்கோவில் அருகில் தனக்கு சொந்தமான நிலத்தில் குளம் வெட்டிமீன் வளர்த்து வருகிறார். இவரது குளத்தில் வழிதவறி வந்த முதலை நீண்ட நாட்களாக தங்கியுள்ளது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, மீன் குட்டையில் வலை மூலம் முதலையை பிடித்தனர். பிடிப்பட்ட முதலை 2.5 அடி நீளம் கொண்டது.
இதனை வனத்துறையினர் பாதுகாப்பாக எடுத்து சென்று சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி குளத்தில் விட்டனர்.
