ADDED : ஏப் 30, 2025 07:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; குமராட்சி வட்டாரத்தில் கோடை பருவ மின்னணு பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி துவங்கியுள்ளது.
குமராட்சி வட்டாரத்தில் நடப்பு கோடைப்பருவ மின்னணு பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி துவங்கப்பட்டுள்ளது.
அதில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், கிராமப்புற வேளாண் அனுபவ திட்ட மாணவிகள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் சமுதாய வள பயிற்றுனர்கள் இப்பணியில் பயிற்சி அளிக்கப்பட்டு ஈடுபட்டு வருகின்றனர்.
வட்டார வேளாண் உதவி இயக்குனர் தமிழ்வேல், வெட்சியூர் கிராமத்தில் நடந்த பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணியை ஆய்வு செய்தார்.
வேளாண் கல்லுாரி பேராசிரியர் ஸ்ரீதரன், வேளாண் அலுவலர் சிந்துஜா உட்பட பலர் உடனிருந்தனர்.