/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பயிர் காப்பீடு விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
/
பயிர் காப்பீடு விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
ADDED : நவ 12, 2025 10:22 PM
கடலுார்: கடலுாரில் சம்பா நெல் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
கடலுார் மாவட்டத்தில் சம்பா நெல்-II பருவத்தில் நெற்பயிர் காப்பீடு செய்ய வரும் 15ம் தேதி கடைசி நாளாகும்.
இதுகுறித்து விவசாயிகளுக்கு ஆட்டோ மூலமாக விழிப்புணர்வு முகாம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி கடலுாரில் நடந்துது.
வேளாண்மை இணை இயக்குநர் லட்சுமிகாந்தன், விவசாயிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கி பேசுகையில், 'சம்பா பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் கடன்பெறும் விவசாயிகள் அறிவிக்கப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவும், கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களிலும் பதிவு செய்யலாம் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை இயக்குநர் (மத்திய திட்டம்) அமிர்தராஜ், கடலூர் வேளாண்மை உதவி இயக்குநர் (பயிர் காப்பீடு) சுரேஷ், காப்பீடு மாவட்ட மேலாளர் நிரஞ்சன் பங்கேற்றனர்.

