/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீராணம் ஏரிக்கரையில் முட்புதர்கள் அகற்றப்படுமா?
/
வீராணம் ஏரிக்கரையில் முட்புதர்கள் அகற்றப்படுமா?
ADDED : நவ 12, 2025 10:21 PM
சேத்தியாத்தோப்பு: வீராணம் ஏரி மேல்கரையில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடியில் துவங்கும் வீராணம் ஏரி மேல்கரை கோதண்டவிளாகம், வட்டத்துார், குடிகாடு, புடையூர், வானமாதேவி, சோழத்தரம், அகரபுத்துார், சித்தமல்லி வரை உள்ளது.
வீராணம் ஏரிக்கும், கோதாவரி வாய்க்காலுக்கும் இடையில் உள்ள மேல்கரையில் பூதங்குடி வீ.என்.எஸ்., மதகு அருகே துவங்கி புடையூர் குடிகாடு வரை முற்றிலும் சீமை கருவேல மரங்கள் காடு போல வளர்ந்துள்ளது. சீமை கருவேல மரங்கள் நிலத்தடி நீரினை உறிஞ்சும் தன்மை கொண்டதால், ஏரியின் நிலத்தடி நீர் படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது. சீமை கருவேல முட்புதர்களால் வீராணம் ஏரி மேல்கரையில் விவசாய நிலங்களுக்கு செல்லும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் கரையில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

