நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த தட்டாம்பாளையம் கிராமத்தில் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், செவ்வாடை பக்தர்கள் உலக நன்மை வேண்டி, கோடி அர்ச்சனை நடந்தது.
குருபோற்றி கோடி அர்ச்சனை, அம்மனுக்கு குங்கும அர்ச்சனை இணைய வழி மூலம் நடந்தது. ஒய்வு பெற்ற டி.இ.ஒ., சுப்ரமணியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மன்ற செயலாளர் விஷால், தொழில் நுட்ப இணைப்பாளர்கள் மனோகரன், ஆசிரியர் கதிர்வேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

