sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிதம்பரம் பகுதிகளில் சுதந்திர தின விழா

/

சிதம்பரம் பகுதிகளில் சுதந்திர தின விழா

சிதம்பரம் பகுதிகளில் சுதந்திர தின விழா

சிதம்பரம் பகுதிகளில் சுதந்திர தின விழா


ADDED : ஆக 17, 2011 03:52 AM

Google News

ADDED : ஆக 17, 2011 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழாவையொட்டி தேசியக் கொடியேற்றப்பட்டது.

சிதம்பரம் நகராட்சியில் நகர மன்ற துணைத் தலைவர் மங்கையற்கரசியும், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஒ., இந்துமதியும், காமராஜ் மெட்ரிக் பள்ளியில் தாளாளர் லட்சுமிகாந்தன் முன்னிலையில் டி.எஸ்.பி., நடராஜனும், சிறப்பு பள்ளியில் முதல்வர் மீனாட்சியும், வீனஸ் பள்ளியில் தாளாளர் வீனஸ்குமாரும் கொடியேற்றினர்.

அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் சுகுமாரும், ஆறுமுக நாவலர் பள்ளியில் அருள்மொழிச்செல்வனும், விநாயகா வித்யாலயா பள்ளியில் தாளாளர் நடராஜன் தலைமையில் சிட்டி யூனியன் வங்கி கிளை மேலாளர் உஷாவும், சேன்ஸ்மல் பாரஸ்மல் ஜெயின் பள்ளியில் தியாகி பதஞ்சலியும் கொடியேற்றினர்.

கிள்ளை: சி.முட்லூர் ஊராட்சியில் தலைவர் தவமந்திரி வெங்கடேசன் கொடியேற்றினார். மடுவங்கரை ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் ரேஷன் கடை மூலம் வழங்கப்படும் பொருட்கள் குறித்தும் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் பில் புத்தகம் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

புவனகிரி: மங்களம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் அங்கயற்கண்ணி தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தமிழ்மணி கொடியேற்றினார்.

நடுவீரப்பட்டு: அரசு மேல் நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜானகிராமன் கொடியேற்றி வைத்து பேசினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

ஸ்ரீமுஷ்ணம்: த.வீ.செ. மேல்நிலைப்பள்ளியில் சீதாலட்சுமி ஆதிவராகனும், ஜெயந்தி பத்மநாபா கல்வி நிறுவனங்களில் தாளாளர் பத்மநாபன் கொடியேற்றினர்.

குறிஞ்சிப்பாடி: வடலூர் வள்ளலார் குருகுலம் பள்ளி, ஓ.பி.ஆர்., கல்வியியல் கல்லூரியில் தாளாளர் டாக்டர் செல்வராஜ் கொடியேற்றி என்.சி.சி., - என்.எஸ்.எஸ்., மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றார்.

சேத்தியாத்தோப்பு: போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சந்திரபோஸ் முன்னிலையில் டி.எஸ்.பி, ராஜேந்திரனும், தெற்குப்பாளையம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ஊராட்சி தலைவர் வைத்தியநாதசாமியும் கொடியேற்றினர்.

பரங்கிப்பேட்டை: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் முத்துபெருமாளும், பேரூராட்சியில் தலைவர் முகமது யூனுசும் கொடியேற்றினர்.

காட்டுமன்னார்கோவில்: நாட்டார்மங்கலம் ராஜிவ்காந்தி தேசிய மேல்நிலை பள்ளியில் தாளாளர் மணிரத்தினமும், ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் ஜெயச்சந்திரனும், குமராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் மாமல்லனும் கொடியேற்றினர்.

நெல்லிக்குப்பம்: நகராட்சியில் கமிஷனர் புவனேஸ்வரி முன்னிலையில் சேர்மன் கெ#வாட் பாபுவும், மோரை மேட்டுத் தெருவில் முன்னாள் படைவீரர் சாமுவேல் கொடியேற்றினார். சிவக்கொழுந்து எம்.எல்.ஏ., விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

சிறுபாக்கம்: ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி வளாகத்தில் முன்னாள் எம்.பி., கணேசன் கொடியேற்றி மரக்கன்றுகள் நட்டார். வேப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பஞ்சாட்சரம் கொடியேற்றினர்.

நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் ஜெயசித்ராவும், மங்களூர் ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் சின்னசாமியும் கொடியேற்றினர்.








      Dinamalar
      Follow us