/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பைக்கில் சென்றவரிடம் வழிப்பறி மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
/
பைக்கில் சென்றவரிடம் வழிப்பறி மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
பைக்கில் சென்றவரிடம் வழிப்பறி மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
பைக்கில் சென்றவரிடம் வழிப்பறி மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
ADDED : செப் 26, 2011 10:31 PM
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே பைக்கில் சென்ற வாலிபரை வழி மறித்து 5 சவரன் தங்க நகைகளை வழிப்பறி செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் அடுத்த குடிகாடு ஆற்றங்கரையைச் சேர்ந்தவர் சீனுவாசன், 31. நேற்று முன்தினம் சொந்த வேலையாக பைக்கில் சிதம்பரம் சென்று விட்டு இரவு கடலூர் திரும்பினார். பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டி அருகே செல்லும்போது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சீனுவாசனை கத்தியை காட்டி வழிமறித்து செயின் மற்றும் மோதிரம் உள்ளிட்ட 5 சவரன் தங்க நகை மற்றும் 1,100 ரூபாய் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். அதன் மதிப்பு 75 ஆயிரம் ரூபாய் ஆகும். இதுகுறித்து சீனுவாசன் கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் வழக்குப் பதிந்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.