ADDED : செப் 26, 2011 10:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலூர் : கள்ளச் சாராயம் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளச்சாராயம் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் நேற்று தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது தீர்த்தனகிரி சுடுகாட்டு அருகே கள்ளச்சாராயம் பதுக்கி விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த குமார், 35 , பேட்டோடை பகுதியில் ஆண்டிக்குப்பம் ராஜேந்திரன், 40 என்பவரும் சிக்கினர். புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து தலா 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.