/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாக்காளர் பட்டியலில் தற்போது பெயர் சேர்க்க முடியாது: கலெக்டர்
/
வாக்காளர் பட்டியலில் தற்போது பெயர் சேர்க்க முடியாது: கலெக்டர்
வாக்காளர் பட்டியலில் தற்போது பெயர் சேர்க்க முடியாது: கலெக்டர்
வாக்காளர் பட்டியலில் தற்போது பெயர் சேர்க்க முடியாது: கலெக்டர்
ADDED : செப் 26, 2011 10:34 PM
கடலூர் : உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இயலாது என கலெக்டர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்து பல கேள்விகள் எழுப்பப்படுகிறது.
சட்ட விதிகளின் படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் அல்லது நீக்கல் செய்வதற்கான படிவம் கொடுத்தால், அதிலிருந்து 7 நாள் அறிவிப்பு கால அவகாசம் கொடுக்க வேண்டும். அத்துடன் மனுக்களை பரிசீலனை செய்வதற்கு குறைந்தபட்ச கால அவகாசம் வேண்டும். எனவே, தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு கொடுத்தவர்களின் பெயர்கள், உள்ளாட்சித் தேர்தல் மனு தாக்கலின் இறுதி நாளான 29ம் தேதிக்கு முன் சட்டவிதிகளின்படி சேர்க்க இயலாது. எனவே கடந்த ஜனவரி 1ம் தேதிக்குப் பிறகு 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் அனைவரும் வரும் அக்டோபர் 24ம் தேதி அன்று துவங்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் போது பெயர்களை சேர்த்துக் கொள்ள முடியும். அவ்வாறு பெயர்கள் சேர்க்கப்பட்ட வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.