/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மாநகராட்சி 3வது வார்டில் ரேஷன் கடை: எம்.எல்.ஏ., திறப்பு
/
கடலுார் மாநகராட்சி 3வது வார்டில் ரேஷன் கடை: எம்.எல்.ஏ., திறப்பு
கடலுார் மாநகராட்சி 3வது வார்டில் ரேஷன் கடை: எம்.எல்.ஏ., திறப்பு
கடலுார் மாநகராட்சி 3வது வார்டில் ரேஷன் கடை: எம்.எல்.ஏ., திறப்பு
ADDED : மார் 12, 2024 06:25 AM

கடலுார் : கடலுார் மாநகராட்சி 3வது வார்டில் புதிய ரேஷன் கடையை அய்யப்பன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
கடலுார் அய்யப்பன் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், கடலுார் மாநகராட்சி 3வது வார்டு, கோண்டூர், வெளிச்செம்மண்டலம் பகுதிகளில் புதிய ரேஷன் கடை மற்றும் உச்சிமேட்டில் பகுதிநேர ரேஷன் கடை கட்டடங்கள் கட்டப்பட்டது.
இந்த கட்டடங்களைஅய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, நேற்று திறந்து வைத்தார்.கவுன்சிலர் பிரகாஷ் வரவேற்றார். தி.மு.க., முன்னாள் மாவட்ட பொருளாளர்குணசேகரன், கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர் துரைராஜ் முன்னிலை வகித்தனர்.
கூட்டுறவு மேலாண் இயக்குனர் லீமால், சார் பதிவாளர் சரண்யா, கான்ட்ராக்டர் ராஜசேகர், ஊராட்சி தலைவர்கள் கோண்டூர் பாலாஜி, உச்சிமேடு காந்தாமணி கண்ணன், துணைத் தலைவர் சாந்தி பழனிவேல், நிர்வாகி ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.