/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின் ஊழியருக்கு 2 ஆண்டு சிறை கடலுார் கோர்ட்டில் தீர்ப்பு
/
மின் ஊழியருக்கு 2 ஆண்டு சிறை கடலுார் கோர்ட்டில் தீர்ப்பு
மின் ஊழியருக்கு 2 ஆண்டு சிறை கடலுார் கோர்ட்டில் தீர்ப்பு
மின் ஊழியருக்கு 2 ஆண்டு சிறை கடலுார் கோர்ட்டில் தீர்ப்பு
ADDED : ஏப் 18, 2025 08:07 AM
கடலுார்: கடலுார், வன்னியர்பாளையத்தை சேர்ந்தவர் இளமாறன். இவர், தனது தம்பி இளஞ்செழியன் என்பவரின் புதிய வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு கடந்த 2013ம் ஆண்டு கடலுார், புதுப்பாளையம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
மின் இணைப்பு வழங்க, மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்த முனுசாமி,56; என்பவர் 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
இதுகுறித்து இளமாறன், கடலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
தொடர்ந்து, லஞ்சம் வாங்கிய முனுசாமியை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
வழக்கு விசாரணை முடிந்து, கடலுார் தலைமை நீதித்துறை நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார். இதில், முனுசாமிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, 15ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.