/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மாவட்டம் 96.06 சதவீதம் தேர்ச்சி: மாநிலத்தில் 10ம் இடத்திற்கு முன்னேற்றம்

ADDED : மே 09, 2025 03:33 AM

கடலுார்: கடலுார் மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் 96.06 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 10வது இடத்திற்கு முன்னேறி இருப்பதால் கல்வித்துறை அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் 3ம் தேதி துவங்கி 25ம் தேதி வரை நடந்தது. கடலுார் மாவட்டத்தில் 246 பள்ளிகளில் இருந்து 14,610 மாணவர்கள், 14,867 மாணவிகள் என, மொத்தம் 29,477 பேர் தேர்வு எழுதினர்.
இவர்களில் 13,913 மாணவர்கள், 14,403 மாணவிகள் என, மொத்தம் 28,316 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 95.23, மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 96.88 ஆகும்.
மாவட்டத்தின் சராசரி தேர்ச்சி சதவீதம் 96.06 ஆகும். மாவட்ட அளவில் தேர்வு எழுதிய 246 பள்ளிகளில் 102 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அதில் 27 அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 3, தனியார் பள்ளிகள் 72 அடங்கும்.
கடலுார் மாவட்டத்தில் கடந்தாண்டு பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் 94.36 சதவீதமாக இருந்தது. இதனால் மாநில அளவில் கடலுார் மாவட்டம் 22ம் இடம் பெற்றிருந்தது. இந்தாண்டு கடந்த ஆண்டை விட 1.70 சதவீதம் தேர்ச்சி அதிகரித்து, 10வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதனால் கல்வித்துறை அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.