/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
"சமச்சீர் பாட புத்தகம் வழங்க வலியுறுத்தி 26ல் போராட்டம்'
/
"சமச்சீர் பாட புத்தகம் வழங்க வலியுறுத்தி 26ல் போராட்டம்'
"சமச்சீர் பாட புத்தகம் வழங்க வலியுறுத்தி 26ல் போராட்டம்'
"சமச்சீர் பாட புத்தகம் வழங்க வலியுறுத்தி 26ல் போராட்டம்'
ADDED : ஜூலை 23, 2011 11:39 PM
கடலூர் : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை உடனடியாக மாணவர்களுக்கு வழங்க வலியுறுத்தி வரும் 26ம் தேதி கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.
சங்கத்தின் மாநிலச் செயலர் ராஜ்மோகன் கடலூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சமமான, தரமான கல்வி முறையை ஏற்படுத்த கடந்த 10 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு கடந்த ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி திட்டத்தை பின்னுக்குத் தள்ளும் முயற்சியில் தற்போதைய அரசு ஈடுபட்டு வருகிறது.
அதேப்போன்று கல்வி கட்டண விஷயத்திலும் தனியார் கல்வி வியாபாரிகளுக்கு ஆதரவான நிலையை எடுத்து வருகிறது. இதனை கண்டித்தும், முழுமையான சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த உடனடியாக சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை வழங்க வலியுறுத்தி வரும் 26ம் தேதி இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு ராஜ்மோகன் கூறினார்.