/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அடரி பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல்
/
அடரி பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல்
அடரி பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல்
அடரி பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல்
ADDED : ஜூலை 24, 2011 10:44 PM
சிறுபாக்கம் : அடரி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சிறுபாக்கம் அடுத்த அடரி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
பள்ளியில் அடரி, பொய்னப்பாடி, அசகளத்தூர், காஞ்சிராங்குளம், ஜாய்ஏந்தல், ரெட்டாக்குறிச்சி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 585 மாணவர்கள் 6 முதல் பிளஸ் 2 வரை படித்து வருகின்றனர்.இப்பள்ளியில் முதுகலை தமிழாசிரியர், இயற்பியல், அறிவியல், உடற்கல்வி உட்பட ஏழு ஆசிரியப் பணிகள் காலியாக உள்ளன. போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வந்தும் கல்வி பயிலமுடியாமல் திரும்பிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
மேலும் பள்ளியில் குடிநீர், கழிவறை வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சைக்கிள்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாமல் திறந்த வெளியில் சைக்கிள்கள் நிறுத்தப்படுவதால், வெயில் மற்றும் மழையில் சைக்கிள்கள் அடிக்கடி பழுதடைகின்றன.இதனால் நீண்ட தூரத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்லமுடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஊரைவிட்டு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள இப்பள்ளிக்கு வாட்ச்மேனும் இல்லாததால் இரவு நேரத்தில் பாதுகாப்பு இல்லை.மாவட்ட கல்வி நிர்வாகம் உடனடியாக காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமித்து, பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

