/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கண்ணாரப்பேட்டை கிராமத்தில் நெல் உற்பத்தி சிறப்பு பயிற்சி
/
கண்ணாரப்பேட்டை கிராமத்தில் நெல் உற்பத்தி சிறப்பு பயிற்சி
கண்ணாரப்பேட்டை கிராமத்தில் நெல் உற்பத்தி சிறப்பு பயிற்சி
கண்ணாரப்பேட்டை கிராமத்தில் நெல் உற்பத்தி சிறப்பு பயிற்சி
ADDED : ஜூலை 24, 2011 10:46 PM
கடலூர் : கடலூர் அடுத்த கண்ணாரப்பேட்டை கிராமத்தில் விவசாயிகளுக்கு நெல் உற்பத்தி சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.காரைக்காடு ஊராட்சி தலைவர் öல்வகுமாரி தலைமை தாங்கினார்.
வேளாண் அலுவலர் முகமது நிஜாம் வரவேற்றார்.வேளாண் உதவி இயக்குனர் இளவரசன் கிராம திட்டத்தின் கூறுகளை விளக்கினார். இணை இயக்குனர் இளங்கோவன் பயிற்சியை துவக்கி வைத்து குறைந்த செலவில் அதிக மகசூல் பெறுவதற்கான தொழில் நுட்பங்களை விளக்கினார்.
மத்திய அரசின் வேளாண் துணை இயக்குனர் சந்திரமோகன், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விதைகளை தாங்களே உற்பத்தி செய்துக் கொள்ள முன்வர வேண்டும் என்றார். விதைச் சான்று அலுவலர் ரவிச்சந்திரன் விதை உற்பத்தி தொழல் நுட்பங்களை விளக்கினார்.வேளாண் அலுவலர் சின்னக்கண்ணு ஒருங்கிணைந்த நெல் பயிர் பாதுகாப்பு பற்றியும், விஜயலட்சுமி மண் பரிசோதனையின் அவசியத்தை விளக்கினார். திருந்திய நெல் சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என டான்பாக் கம்பெனி சம்பத்குமார் அறிவித்தார். முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன.வேளாண் அலுவலர் தெய்வசிகாமணி நன்றி கூறினார்.

