ADDED : ஜூலை 25, 2011 11:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலூர் : கடலூரில் மஞ்சக்குப்பம் கிளை பிராமணர் சங்க மாதாந்திரக் கூட்டம் நடந்தது.கிளைத் தலைவர் திருமலை தலைமை தாங்கினார்.
ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தார். கோவிந்து வரவேற்றார். சிறப்பு விருந்திரான மாநில ஆலோசகர் அருணாசலம் 10 மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். துணைத் தலைவர் சுப்ரமணியன், உறுப்பினர் கணபதி சுப்ரமணியன், சாவடி கிளை தலைவர் வரதராஜன், கூத்தப்பாக்கம் கிளை துணைத் தலைவர் பிரகாசம் வாழ்த்திப் பேசினர்.உறுப்பினர்களை அதிகம் சேர்ப்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.சங்கர் நன்றி கூறினார்.

