sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பைக்கிலிருந்து ரூ.96 ஆயிரம் திருடிய பலே ஆசாமி கைது

/

பைக்கிலிருந்து ரூ.96 ஆயிரம் திருடிய பலே ஆசாமி கைது

பைக்கிலிருந்து ரூ.96 ஆயிரம் திருடிய பலே ஆசாமி கைது

பைக்கிலிருந்து ரூ.96 ஆயிரம் திருடிய பலே ஆசாமி கைது


ADDED : ஜூலை 25, 2011 11:06 PM

Google News

ADDED : ஜூலை 25, 2011 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : விவசாயி பைக்கிலிருந்து 96 ஆயிரம் ரூபாயை திருடிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.கடலூரை அடுத்த சின்னதானகுப்பத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் தங்கவேல், 29.

இவர் கடந்த மாதம் 26ம் தேதி நீர் மோட்டார் வாங்க 96 ஆயிரம் ரூபாயை தனது மோட்டார் பைக்கில் வைத்துக் கொண்டு கடலூர் வந்தார்.உழவர் சந்தை அருகே உள்ள ஒரு கடையில் பைப் வாங்க பைக்கை நிறுத்தி விட்டு சென்றவர் திரும்பி வந்து பார்த்த போது பணத்தை காணவில்லை.இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேல் தலைமையில் சக்கரவர்த்தி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜோசப், ஏட்டுகள் கண்ணன், ஆறுமுகம், செந்தில் உள்ளிட்ட தனிப்படை போலீசார் தேடிவந்தனர்.நேற்று அதிகாலை கடலூர் பஸ் ஸ்டாண்டில் சந்தேகப்படும்படியான வாலிபரை தனிப்படை போலீசார் விசாரித்ததில் சிதம்பரம் பழைய புவனகிரி ரோட்டைச் சேர்ந்த முருகேசன் மகன் வெங்கடேசன், 33; தற்போது பண்ருட்டி ஆர்.எஸ்.மணி நகரில் வசித்து வருவதும் தெரியவந்தது.மேலும் இவர் கடலூர் உழவர் சந்தை அருகே நிறுத்தியிருந்த தங்வேலுவின் பைக்கிலிருந்து பணத்தை திருடியதையும் ஒப்புக் கொண்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் 96 ஆயிரம் ரூபாயை போலீசார் கைப்பற்றி அவரிடமிருந்த 10க்கும் மேற்பட்ட சாவிகள், கட்டிங்பிளேயரை பறிமுதல் செய்து வெங்கடேனை கைது செய்தனர்.








      Dinamalar
      Follow us