/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநில யோகா போட்டி சி.கே.பள்ளி சாதனை
/
மாநில யோகா போட்டி சி.கே.பள்ளி சாதனை
ADDED : ஜூலை 26, 2011 10:44 PM
கடலூர் : மாநில அளவிலான யோகா போட்டியில் கடலூர் சி.கே.பள்ளி மாணவிகள் தங்கப்பதக்கம் பெற்றனர்.
காஞ்சிபுரம், நாராயணா சேவாஸ்சிரமத்தில் மாநில அளவிலான யோகா போட்டி நடந்தது.
அதில் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் கடலூர் சி.கே.பள்ளி மாணவர்கள் காவியப்ரியா, நவீன்ராஜ், விக்னேஷ், அஜய் சீனிவாசன், திவ்யதர்ஷினி ஆகியோர் தங்கப்பதக்கத்தையும், சரண்யா, சவுமியாஸ்ரீ வெள்ளி பதக்கத்தையும், அனிஷ்குமார், கோதர்ஷனி, வசந்த் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். மாநில யோகா போட்டியில் பதக்கம் பெற்ற மாணவர்கள் மற்றும் யோகா சுடரியர் பாலமுருகனையும் பள்ளி இயக்குனர் சந்திரசேகரன், முதல்வர் தார்ஷியஸ், ஆலோசகர் கல்யாணிபிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் சரவணன், சிவமணி பாராட்டினர்.