/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., பிரமுகரைத் தாக்கிய ஒருவர் கைது: நால்வருக்கு வலை
/
அ.தி.மு.க., பிரமுகரைத் தாக்கிய ஒருவர் கைது: நால்வருக்கு வலை
அ.தி.மு.க., பிரமுகரைத் தாக்கிய ஒருவர் கைது: நால்வருக்கு வலை
அ.தி.மு.க., பிரமுகரைத் தாக்கிய ஒருவர் கைது: நால்வருக்கு வலை
ADDED : ஜூலை 26, 2011 10:45 PM
நெய்வேலி : நெய்வேலியில் அ.தி.மு.க., பிரமுகரைத் தாக்கி கடையை அடித்து சேதப்படுத்திய வழக்கில் போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
மேலும் நான்கு பேரை தேடி வருகின்றனர். நெய்வேலியைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் சசிகுமார், 38. வட்டம் 8ல் பேக்கரி கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை இவரது கடைக்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் கடைக்குள் புகுந்து சசிகுமாரை தாக்கி, கடையை அடித்து நொறுக்கி விட்டு தப்பியோடியது. இதுகுறித்து டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப் பதிந்து வடக்கு மேலூரைச் சேர்ந்த ஆறுமுகத்தை, 35; கைது செய்தனர். மேலும், ரங்கநாதன், வெங்கடேசன், செல்லதுரை, மற்றொரு வெங்கடேசன் ஆகியோரை தேடி வருகின்றனர்.