ADDED : ஆக 06, 2011 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி : வழியில் வாகனத்தை நிறுத்திருந்ததை தட்டிக் கேட்ட டாக்டரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.வடலூர் கலியபெருமாள் தெரு அருகே மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் துரை செல்வம், 39; இவர் நேற்று மாலை வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு காரில் சென்றார்.
மருத்துவமனை அருகே வந்த போது குமரவேல், 42; என்பவர் குறுக்கே இரு சக்கர வாகனத்துடன் நின்றிருந்தார். கார் செல்ல வழி இல்லாதால் டாக்டர் துரை செல்வம், குமரவேலிடம் இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தும்படி கூறினார்.இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில் குமரவேல், டாக்டர் துரை செல்வத்தைத் தாக்கினார்.வடலூர் போலீசார் வழக்குப் பதிந்து குமரவேலை கைது செய்தனர்.