sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தி.மு.க., பிரமுகரின் வீட்டை சூறையாடி கொலை மிரட்டல்

/

தி.மு.க., பிரமுகரின் வீட்டை சூறையாடி கொலை மிரட்டல்

தி.மு.க., பிரமுகரின் வீட்டை சூறையாடி கொலை மிரட்டல்

தி.மு.க., பிரமுகரின் வீட்டை சூறையாடி கொலை மிரட்டல்


ADDED : ஆக 07, 2011 01:43 AM

Google News

ADDED : ஆக 07, 2011 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரம் அருகே தி.மு.க., பிரமுகரின் வீட்டை சூறையாடி, கொலை மிரட்டல் விடுத்த சமூக நலத்துறை அமைச்சரின் மருமகன் உட்பட 21 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.சிதம்பரம் அடுத்த வால்காரமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு, 45; கீரப்பாளையம் ஒன்றிய தி.மு.க., துணை அமைப்பாளர்.

அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜி என்கிற ராஜ்மோகன். (தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்) அ.தி.மு.க.,வைச் சேர்ந்த இவர், சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயத்தின் மருமகன். இவருக்கும், பாலுவிற்கும் தேர்தல் முன்விரோதம் உள்ளது.இந்நிலையில், பாலுவிடம் கார் டிரைவராக வேலை செய்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர், நான்கு நாட்களுக்கு முன் ராஜியிடம் வேலைக்குச் சேர்ந்தார். நேற்று முன்தினம் சுந்தரை சந்தித்த பாலு, மீண்டும் தன்னிடமே வேலைக்கு வந்து விடுமாறு கூறினார்.



இதனை அறிந்த ராஜி, பாலுவை மொபைல் போனில் தொடர்பு கொண்டு மிரட்டினார். அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு வால்காரமேடு கிராமத்திற்கு இன்னோவா மற்றும் டாடா சுமோ காரில் சென்ற 20 பேர் கொண்ட கும்பல், பாலுவின் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்து பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருட்களையும், வீட்டின் முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கினர். மேலும், பாலுவை கொலை செய்து விடுவோம் என மிரட்டிவிட்டு சென்றனர். இதுகுறித்து பாலுவின் சகோதரர் முருகன், 41; நேற்று மதியம் சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயத்தின் மருமகன் ராஜி என்கிற ராஜ்மோகன் மற்றும் அடையாளம் தெரியாத 20 பேர் மீது 147, 148, 448, 424, 294(பி), 506(11) ஆகிய 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.










      Dinamalar
      Follow us