sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நடுவீரப்பட்டில் 24 மணி நேர மருத்துவமனை: மா.கம்யூ.,

/

நடுவீரப்பட்டில் 24 மணி நேர மருத்துவமனை: மா.கம்யூ.,

நடுவீரப்பட்டில் 24 மணி நேர மருத்துவமனை: மா.கம்யூ.,

நடுவீரப்பட்டில் 24 மணி நேர மருத்துவமனை: மா.கம்யூ.,


ADDED : ஆக 18, 2011 12:30 AM

Google News

ADDED : ஆக 18, 2011 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : நடுவீரப்பட்டு மருத்துவமனையில் போதுமான டாக்டர்களை நியமனம் செய்து 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மா.கம்யூ., கிளை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடுவீரப்பட்டு மா.கம்யூ., கட்சியின் 20வது கிளை மாநாடு நடந்தது. ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். ராஜமாணிக்கம் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர் தட்சணாமூர்த்தி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். கிளைச் செயலர் கணேசன் வேலை அறிக்கையை படித்தார். இதன் மீது பிரதிநிதிகள் விவாதம் நடத்தினர். மாவட்ட குழு உறுப்பினர் ராஜேஷ்கண்ணன் பேசினார். கிளைச் செயலராக கணேசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மாநாட்டில் ஒன்றிய செயலர் மாதவன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மாநாட்டில் நடுவீரப்பட்டில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். தெற்கு தெருவை இணைக்கும் பாலத்தை புதிதாக கட்ட வேண்டும். போலீசாருக்கு குடியிருப்பு கட்டிக் கொடுக்க வேண்டும். நடுவீரப்பட்டு மருத்துவ மனையில் கூடுதல் டாக்டர்களை நியமித்து 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.










      Dinamalar
      Follow us