/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதுகலை ஆசிரியர்கள் முதல்வருக்கு பாராட்டு
/
முதுகலை ஆசிரியர்கள் முதல்வருக்கு பாராட்டு
ADDED : ஆக 22, 2011 10:13 PM
கடலூர் : தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு முதுகலை ஆசிரியர்களை கூடுதலாக நியமித்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் மணிவாசகம் விடுத்துள்ள அறிக்கை: கடந்த 1978ம் ஆண்டு மேல்நிலை கல்வி துவங்கிய போது தரம் உயர்த்தப்பட்ட ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளிகளுக்கும் 10 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டது.
பின்னர் அதனை கடந்த 89ம் ஆண்டில் 6 ஆகவும், 98ம் ஆண்டில் ஐந்து இடங்களாகவும் குறைக்கப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, தற்போது தர்ம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு தற்போது உள்ள 5 முதுகலை ஆசிரியர் பணியிடங்களோடு, தமிழ், வணிகவியல், பொருளியல் மற்றும் வரலாறு ஆகிய நான்கு பாடங்களுக்கும் சேர்த்து 9 முதுகலை ஆசிரியர்களை வழங்கிய முதல்வர், கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

