sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக கடலூரில் மாணவர்கள் ஊர்வலம்

/

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக கடலூரில் மாணவர்கள் ஊர்வலம்

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக கடலூரில் மாணவர்கள் ஊர்வலம்

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக கடலூரில் மாணவர்கள் ஊர்வலம்


ADDED : ஆக 26, 2011 12:14 AM

Google News

ADDED : ஆக 26, 2011 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : லோக்பால் மசோதாவை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அன்னா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடலூரில் ஆயிரக் கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது.

வலிமையான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி காந்தியவாதி அன்னாஹசாரே கடந்த 16ம் தேதி முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்து கடலூரில் சி.கே.கல்வி நிறுவனங்கள் சார்பில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கே.என்.சி.,யிலிருந்து துவங்கிய ஊர்வலத்தை லோக்பால் கூட்டமைப்பு துணைத் தலைவர் செல்வமும், உழவர் சந்தையில் துவங்கிய ஊர்வலத்தை துணைத் தலைவர் அப்பாஜி, பொருளாளர் முத்துக்குமரனும் துவக்கி வைத்தனர்.சி.கே., பள்ளி, ஜெயராம் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஊர்வலம் மஞ்சக்குப்பம் மைதானத்தில் முடிவடைந்து, அங்கு நடந்த கூட்டத்திற்கு லோக்பால் கூட்டமைப்பு கடலூர் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். இணைச் செயலர் மணிவண்ணன் வரவேற்றார். சி.கே.பள்ளி தாளாளர் ஹேமா சின்னிகிருஷ்ணன், சி.கே.கல்வி நிறுவனங்களின் இயக்குனர் சந்திரசேகரன், வழக்கறிஞர் அசோக்குமார், வணிகர் சங்க பாலு உள்ளிட்டோர் பேசினர். பொதுச் செயலர் நாகராசன் நன்றி கூறினார். தேவனாம்பட்டினம்: மாணிக்கம் நினைவு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி சார்பில் சிறுவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தில் பள்ளியின் தாளாளர் குப்புராஜ், ஆசிரியர்கள் மற்றும் சிறுவர்கள் பங்கேற்றனர்.










      Dinamalar
      Follow us