sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சுத்த சன்மார்க்க நிலையத்தின் 60வது ஆண்டு வைர விழா நிறைவு

/

சுத்த சன்மார்க்க நிலையத்தின் 60வது ஆண்டு வைர விழா நிறைவு

சுத்த சன்மார்க்க நிலையத்தின் 60வது ஆண்டு வைர விழா நிறைவு

சுத்த சன்மார்க்க நிலையத்தின் 60வது ஆண்டு வைர விழா நிறைவு


ADDED : ஆக 26, 2011 12:14 AM

Google News

ADDED : ஆக 26, 2011 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி : சுத்த சன்மார்க்க நிலையத்தின் 60வது ஆண்டு வைர விழா நேற்று வடலூரில் நடந்தது.

வடலூர் சுத்த சன்மார்க்க நிலையத்தின் 60வது ஆண்டு வைர விழா நிறைவு, ஓ.பி.ஆரின் 41 வது ஆண்டு நிறைவு நாள் விழா வள்ளலார் குருகுலம் பள்ளியில் நடந்தது. ஓ.பி.ஆர்., கல்வி நிறுவனங்கள் சார்பில் நடந்த மாணவர்களின் ஊர்வலத்தை ஒளவை நடராசன் துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் நான்கு முனை சந்திப்பு சாலையில் இருந்த ஓ.பி.ஆர்., உருவ படத்திற்கு மாணவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் டாக்டர். மகாலிங்கம் கலையரங்கில் நடந்த விழாவிற்கு ஓ.பி.ஆர்., கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ் வரவேற்றார். சுத்த சன்மார்க்க நிலைய துணைத்தலைவர் ஊரன் அடிகள் தலைமை தாங்கினார். இல்லறஞானி பூமலை ஐயா, சென்னை ராமலிங்கர் பணிமன்றம் செயலர் வைத்தியலிங்கம், சென்னை அருள்ஜோதி சங்கத் தலைவர் சோமசுந்தரம், ரெட்டிமுரசு இதழ் ஆசிரியர் இளங்குமரன், முனைவர் ஒளவை நடராசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமானுஜம், அ.தி.மு.க., நகர செயலர் ராமலிங்கம், ஜெ., பேரவை செயலர் கிருஷ்ணன், இளங்குமரன் , பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் ஓ.பி.ஆர்., கல்வி நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஓ.பி.ஆர்., கலைச்செல்வர் விருதுகளையும், பரிசையும் ஒளவை நடராஜன் வழங்கினார்.










      Dinamalar
      Follow us