sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மேல்மாம்பட்டு சாலை படுமோசமாக மாறிய அவலம்

/

மேல்மாம்பட்டு சாலை படுமோசமாக மாறிய அவலம்

மேல்மாம்பட்டு சாலை படுமோசமாக மாறிய அவலம்

மேல்மாம்பட்டு சாலை படுமோசமாக மாறிய அவலம்


ADDED : ஆக 26, 2011 12:14 AM

Google News

ADDED : ஆக 26, 2011 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு செல்லும் சாலை கந்தல் சாலையாக மாறியுள்ளதால் பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு ஊராட்சி குடியிருப்புவாசிகள் சாக்கடை கழிவுகளை ரோட்டில் விடுவதால் சாலையில் 500 மீட்டர் அளவில் சாலைகளில் பல இடங்களில் மழைநீர் குட்டையாக தேங்கி தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது. இந்த சாலையில் தினமும் அரசு டவுன்பஸ் தடம் எண் 7, 4 முறை இயக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை வழியாக முத்தரசன்குப்பம், கீழ்மாம்பட்டு, சாத்திப்பட்டு, சி.என்.பாளையம், பத்திரக்கோட்டை, சிலம்பிநாதன்பேட்டை ஆகிய 7 கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஓர் ஆண்டாக கற்கள் பெயர்ந்து கந்தல் சாலையாக மாறியுள்ளது. ஆனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால் தற்போது பெய்த மழையில் பல இடங்களில் சாலை சுவடே மறைந்து குட்டையாகவே காட்சியளிக்கின்றது. மழைநீர் தேங்காமல் தடுத்திட வடிகால் வசதி ஏற்படுத்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.

சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் சாலை வீணாவது மட்டுமல்லாமல் பாதிப்பது என்னவோ பொதுமக்கள் தான். இதற்கு நெடுஞ்சாலை, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வடிகால் வசதி, சாலையை சீரமைக்க வேண்டும்.








      Dinamalar
      Follow us