sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வள்ளலாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு வடலூர் வந்தவர் ஓ.பி.ஆர்., ஒளவை நடராஜன்

/

வள்ளலாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு வடலூர் வந்தவர் ஓ.பி.ஆர்., ஒளவை நடராஜன்

வள்ளலாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு வடலூர் வந்தவர் ஓ.பி.ஆர்., ஒளவை நடராஜன்

வள்ளலாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு வடலூர் வந்தவர் ஓ.பி.ஆர்., ஒளவை நடராஜன்


ADDED : ஆக 26, 2011 12:14 AM

Google News

ADDED : ஆக 26, 2011 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி : வள்ளலாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு வடலூர் வந்தவர் ஓ.பி.ஆர்., என முனைவர் ஒளவை நடராஜன் பேசினார்.

வடலூர் சுத்த சன்மார்க்க நிலையத்தின் 60வது ஆண்டு வைர விழா நிறைவு நாள் விழாவில் முனைவர் ஒளவை நடராஜன் பேசியதாவது: முன்னாள் முதல்வர் ஓ.பி.ஆரின் மனைவி, மகன் இறந்த பின் அரசியல் வாழ்வை விட்டு அவர் திருவண்ணாமலைக்கு செல்ல முடிவு செய்தார். அப்போது, உணவை கேட்காமல் கொடுக்க வேண்டும் என்ற வள்ளலாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அவர் வடலூர் வந்து சுத்த சன்மார்க்க நிலையம், கல்வி நிறுவனங்களை உருவாக்கினார். இன்று இங்கு ஒரு பெண் குழந்தை பள்ளியில் சேர்ந்தால் கல்லூரி படிப்பை முடித்து 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் தகுதியுடன் செல்கின்றனர். ஒரு நாட்டையோ, கல்வி நிறுவனத்தையோ வளர்க்க குறைந்தது 60 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது ஒரு மனிதனின் 150 வயது வளர்ச்சிக்கு ஒப்பானது. இந்த கல்வி நிறுவனங்களின் கல்வி தந்தையாக மகாலிங்கம், கல்வி தாயாக செல்வராஜூம், கல்வி பாட்டனாக ஓ.பி.ஆரும் விளங்குகிறார். ஒரு நிறுவனத்தை தொடங்குவது பெரியதல்ல, அதைத் தொடர்ந்து நடத்துவதுதான் பெரியது. இவ்வாறு முனைவர் ஒளவை நடராஜன் பேசினார்.








      Dinamalar
      Follow us