sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அனுமதியின்றி மணல் கடத்திய லாரி பறிமுதல்

/

அனுமதியின்றி மணல் கடத்திய லாரி பறிமுதல்

அனுமதியின்றி மணல் கடத்திய லாரி பறிமுதல்

அனுமதியின்றி மணல் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : ஆக 27, 2011 11:24 PM

Google News

ADDED : ஆக 27, 2011 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : அனுமதியின்றி மணல் கடத்திய லாரியை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

நெல்லிக்குப்பம் அடுத்த கோண்டூரில் உள்ள சவுக்கு தோப்பில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் எடுத்து வந்து குவித்து திருட்டுத் தனமாக லாரிகள் ஏற்றிச் சென்று விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதனைத் தொடர்ந்து நெல்லிக்குப்பம் போலீஸ் தலைமைக் காவலர் ஏழுமலை அந்த இடத்திற்குச் சென்ற போது அங்கிருந்து வேகமாக வந்த டி.என்.32 எச் 2940 எண்ணுள்ள லாரியை நிறுத்தியுள்ளார். லாரி நிற்காமல் சென்றதால் துரத்திச் சென்று பிடித்துப் பார்த்த போது அனுமதி இல்லாமல் மணல் கடத்தியது தெரியவந்தது. மணல் எடுத்து செல்வது தெரியாமல் இருக்க மணலை தார்பாய் மூலம் முழுவதும் மூடி கயிறுகட்டி எடுத்துச் சென்றுள்ளனர். உடன் போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.








      Dinamalar
      Follow us