sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தமிழகத்தில் வெண்மை புரட்சி ஏற்படுத்த 12 ஆயிரம் ஜெர்சி மாடுகள் : சம்பத் தகவல்

/

தமிழகத்தில் வெண்மை புரட்சி ஏற்படுத்த 12 ஆயிரம் ஜெர்சி மாடுகள் : சம்பத் தகவல்

தமிழகத்தில் வெண்மை புரட்சி ஏற்படுத்த 12 ஆயிரம் ஜெர்சி மாடுகள் : சம்பத் தகவல்

தமிழகத்தில் வெண்மை புரட்சி ஏற்படுத்த 12 ஆயிரம் ஜெர்சி மாடுகள் : சம்பத் தகவல்


ADDED : ஆக 27, 2011 11:25 PM

Google News

ADDED : ஆக 27, 2011 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : ''தமிழகத்தில் வெண்மை புரட்சி ஏற்படுத்திட வரும் 15ம் தேதி 12 ஆயிரம் ஜெர்சி ரக கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளது'' என சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் சம்பத் பேசினார்.

பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் அமுதவல்லி தலைமை தாங்கினார். சிவசுப்ரமணியன் எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ., முருகேசன் முன்னிலை வகித்தனர். மாற்றுத் திறனாளி அலுவலர் தங்கவேல் வரவேற்றார். ஜெ., பேரவை நகர செயலர் செல்வம், தொரப்பாடி பேரூர் கழகச் செயலர் கனகராஜ், ஒன்றிய செயலர் கமலக்கண்ணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலர் தாஜூதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் சம்பத் மாற்று திறனாளிகளுக்கு 2 லட்சத்து 8 ஆயிரத்து 332 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசியதாவது:

ஜெ., தலைமையில் தமிழக அரசு பொறுப்பேற்று 104 நாட்களில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேளாண் துறையில் மானியத்தில் விதை, புதிய திட்டங்கள் அறிவித்து பசுமை புரட்சி செய்துள்ளார். 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 12 ஆயிரம் ஜெர்சி கறவை மாடுகள் வழங்கி பால் உற்பத்தியில் தமிழகம் முதல் மாநிலமாக மாற்ற வெண்மை புரட்சிக்கான திட்டம் வரும் 15ம் தேதி அண்ணா துரை பிறந்த நாளில் செயல்படுத்தப்பட உள்ளது. மீனவர்களுக்கு நீல புரட்சித் திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது. உலகத்திலேயே வேறு எங்கும் இல்லாத அளவில் 9 லட்சத்து 12 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப் டாப் கம்ப்யூட்டர்களை முதல்வர் வழங்குகிறார். 1 கோடியே 85 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்க முடிவு செய்து முதற் கட்டமாக 25 லட்சம் குடும்பங்களுக்கு வரும் 15ம் தேதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் சம்பத் பேசினார்.










      Dinamalar
      Follow us