sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வடலூர் அருகே மளிகைக்கடைக்காரர் கொலை வழக்கில் ஒருவர் கைது

/

வடலூர் அருகே மளிகைக்கடைக்காரர் கொலை வழக்கில் ஒருவர் கைது

வடலூர் அருகே மளிகைக்கடைக்காரர் கொலை வழக்கில் ஒருவர் கைது

வடலூர் அருகே மளிகைக்கடைக்காரர் கொலை வழக்கில் ஒருவர் கைது


ADDED : ஆக 27, 2011 11:26 PM

Google News

ADDED : ஆக 27, 2011 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி : மளிகை கடைக்காரரைக் கொலை செய்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

வடலூர் அடுத்த ஆபத்தாரணபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 56. இவர் தனது வீட்டிலேயே மளிகை கடை நடத்தி வந்தார். கடந்த 22ம் தேதி மாலை அவரது மனைவி மற்றும் மகளும் மருத்துவமனைக்குச் சென்றிருந்த போது கிருஷ்ணமூர்த்தி கடையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இது குறித்து வடலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் ஆபத்தாரணபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ஆனந்தனை, 26 சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்தனர். அதில் கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். உடன் போலீசார் ஆனந்தனை கைது செய்தனர். வாக்குமூலம் வருமாறு: கிருஷ்ணமூர்த்தியிடம் நான் பல முறை கடன் கேட்டும் தரமறுத்து விட்டார். ஒரு நாள் கடைக்கு பொருட்கள் வாங்குவது போல் சென்று அவரிடம் இருந்து 1,000 ரூபாய் பிடுங்கிச் சென்றேன். இதனால் அவரது மனைவிகன்னியாகோவிலில் என் பெயரைக் கூறி மண்ணை வாரி விட்டதாக என் நண்பர்கள் கூறினர். மேலும் கிருஷ்ணமூர்த்தி கடை அருகில் எனது நண்பர் சந்தோஷ் வைத்திருந்த கடையையும் காலி செய்ய வைத்தார். அவர் இல்லாத நேரத்தில் அவரது மகளிடம் பேசி கடன் வாங்கிச் செல்வேன். இதனையறிந்த கிருஷ்ணமூர்த்தி என்னை கண்டித்தார். இதேப்போன்று பல வழிகளில் தொல்லை கொடுத்து வந்த கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்ய திட்டமிட்டு வீட்டில் யாறும் இல்லாத நேரத்தில் கடையில் இருந்த அவரை முகத்தில் மிளகாய் பொடி தூவி கத்தியால் குத்திக் கொலை செய்தேன். இவ்வாறு ஆனந்தன் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.










      Dinamalar
      Follow us