/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீரபத்திரர் சுவாமி கோவில் 31ம் தேதி கும்பாபிஷேகம்
/
வீரபத்திரர் சுவாமி கோவில் 31ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED : ஆக 28, 2011 11:06 PM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் வீரபத்திரர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் 31ம் தேதி நடக்கிறது.
நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் வீரபத்திரர் சுவாமி கோவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் விழா துவங்கியது. இன்று 29ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் விழா துவங்கும். தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடக்கிறது. நாளை (30ம் தேதி) லட்சுமி ஹோமம் யாகசாலை பூஜைகள் நடக்கிறது. 31ம் தேதி காலை 9 மணிக்கு வலம்புரி கணபதி, வீரபத்திரர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், ஆஞ்சநேயர் கோவில்களின் கும்பாபிஷேகமும், மாலை திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. விழாவில் சிதம்பரம் மவுன மடாதிபதி மவுன சுந்தரமூர்த்தி சுவாமிகள் பங்கேற்கிறார். விழா ஏற்பாடுகளை லோகு செய்து வருகிறார்.