/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலூர் அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர்கள் அவதி! பாதுகாப்பற்ற நிலையில் படிக்கும் அவலம்
/
கடலூர் அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர்கள் அவதி! பாதுகாப்பற்ற நிலையில் படிக்கும் அவலம்
கடலூர் அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர்கள் அவதி! பாதுகாப்பற்ற நிலையில் படிக்கும் அவலம்
கடலூர் அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர்கள் அவதி! பாதுகாப்பற்ற நிலையில் படிக்கும் அவலம்
ADDED : பிப் 16, 2024 12:01 AM

கடலுார் : கடலுாரில் பழமையான அரசு ஐ.டி.ஐ.,யில், கட்டடங்கள் பராமரிப்பின்றி உள்ளதுடன், அடிப்படை வசதிகளும் இல்லாமல் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கடலூர் செம்மண்ட லத்தில் அரசு ஐ.டி.ஐ., (தொழிற் பயிற்சி நிலையம்) உள்ளது.
கடந்த 1959ம் ஆண்டு துவங்கப்பட்ட இங்கு, டர்னர், பிட்டர், மெக்கானிக், வெல்டர், இயந்திரவியல், பிளாஸ்டிக் மோல்டிங், கம்ப்யூட்டர் உட்பட 12 வகையான தொழிற்பாட பிரிவுகள் உள்ளன.
கடலுார் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த 1,200 மாணவர்கள் காலை மற்றும் மதியம் என, சுழற்சி முறையில் பயிற்சி பெற்று வருகின்றனர். ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் 120க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
மாவட்டத்தில் மிகவும் பழமையானதும், ஏராளமான தொழிலாளர்களை உருவாக்கிய பெருமை இந்த ஐ.டி.ஐ.,க்கு உண்டு.
ஆனால், இந்த ஐ.டி.ஐ., மீது, அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை. அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ஐ.டி.ஐ., வளாகத்தில் சாலை பழுதடைந்து, ஜல்லிகள் பெயர்ந்த நிலை யில் கரடு முரடாக உள்ளது. இதனால், மாற்றுத்திறனாளி மாணவர்கள் மிகவும் அவதியடைகின்றனர்.
இங்கு தேர்வுகளை ஒருங்கிணைந்து நடத்துவதற்கு ஆடிட்டோரியம் வசதி இல்லை. படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, குடிநீர், கழிப்பிட வசதிகள் இல்லை.
புதியதாக கட்டப்பட் டுள்ள கழிப்பிடங்களும் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. முக்கியமாக, ஐ.டி.ஐ., வளாகத்தை சுற்றி சுற்றுசுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிடுகிறது.
காலையில் ஆங்காங்கே குவியல் குவியலாக கிடக்கும் மதுபாட்டில்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை முகம் சுளிக்க வைக்கிறது. போலீசாரும் அந்த பக்கம் எட்டிப்பார்ப்பதில்லை.
இங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கான குடியிருப்புகள் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், இந்த குடியிருப்புகளை பயன்படுத்த முடியாமல் பணி மாறுதலில் வெளியூர்களில் இருந்து வரும் ஆசிரியர்கள் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர்.
மேலும், ஐ.டி.ஐ., கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகுவதுடன், மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
எனவே, கடலுாரில் மிகவும் பழமையான அரசு ஐ.டி.ஐ.,யில, கட்டடங்களை பதுப்பித்தும், குடிநீர், கழிப்பிடம், சாலை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தொழில்துறை அமைச்சர் கணசேன், கடலுார் அரசு ஐ.டி.ஐ., விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.