/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் இன்னர்வீல் சங்கத்தின் 50ம் ஆண்டு நிறைவு விழா
/
கடலுார் இன்னர்வீல் சங்கத்தின் 50ம் ஆண்டு நிறைவு விழா
கடலுார் இன்னர்வீல் சங்கத்தின் 50ம் ஆண்டு நிறைவு விழா
கடலுார் இன்னர்வீல் சங்கத்தின் 50ம் ஆண்டு நிறைவு விழா
ADDED : நவ 26, 2025 07:29 AM

கடலுார்: கடலுார் இன்னர்வீல் சங்கத்தின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு பொன்விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு இன்னர்வீல் மாவட்டம் 298ன் தலைவி பத்மினி கபாலிமூர்த்தி தலைமை தாங்கினார். பொன்விழா சேர்மன் கலையரசி ராமதாஸ், சங்க தலைவர் சுபஸ்ரீ சுபாஷ், பொன்விழா ஆலோசகர் எமெல்டா ஜோ, பொன்விழா செயலாளர் ஸ்ரீதேவி இந்திரகுமார், சங்க செயலாளர் ஷாலினி ரமேஷ், பொருளாளர் அமுதவல்லி சந்திரசேகரன் முன்னிலை வகித்த னர்.
சிறப்பு அழைப்பாளராக அசோசியேஷன் எடிட்டர் கமலா செல்வம் பங்கேற்று பேசினார். தொடர்ந்து சங்கத்தின் 50 ஆண்டுகால வரலாறு படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, சங்கத்தின் கையேடு வெளியிடப்பட்டது. முன்னாள் தலைவியர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் பாராட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
மே லும் பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோ ய் தடுப்பூசி போடுதல் திட்டத்திற்காக நிதி வழங்கப்பட்டது. கடலுார் பெரியார் கலைக்கல்லுாரி மாணவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி வசதியும், மல்யுத்தப் பயிற்சிக்காக 50 மெத்தைகளும் 2 லட்ச ரூபாய் செ லவில் வழங்கப்பட உள்ளது.
விழாவில் துணைத்தலைவர் கீதா பிறையோன், எடிட்டர் கேத்தரின் டைசன் மற்றும் முன்னாள் தலைவியர், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

