/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் முல்லை கோ- ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்
/
கடலுார் முல்லை கோ- ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்
கடலுார் முல்லை கோ- ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்
கடலுார் முல்லை கோ- ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்
ADDED : செப் 20, 2025 06:54 AM

கடலுார் : கடலுார் முல்லை கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி சிறப்பு விற்பனையை கலெக்டர் துவக்கி வைத்தார்.
கடலுார் முல்லை கோ - -ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்தார். கடலுார் சரக கைத்தறி துறை உதவி இயக்குனர் இளங்கோவன், கந்தசாமி நாயுடு மகளிர் கலைக்கல்லுாரி முதல்வர் சபீனா பானு, உதவி பேராசிரியர் ஸ்ரீதேவி பங்கேற்றனர்.
கலெக்டர் கூறுகையில், 'தீபாவளி முன்னிட்டு கடலுார் மண்டலத்திற்கு 8.75 கோடி ரூபாய் விற்பனை இலக்காகவும், அதில் கடலுார் மாவட்டத்தில் உள்ள 6 விற்பனை நிலையங்களான முல்லை விற்பனை நிலையத்திற்கு 2 கோடி ரூபாய், சிதம்பரம் விற்பனை நிலையத்திற்கு 75 லட்சம், நெய்வேலி விற்பனை நிலையத்திற்கு 50 லட்சம், பண்ருட்டி விற்பனை நிலையத்திற்கு 22 லட்சம், விருத்தாசலம் விற்பனை நிலையத்திற்கு 40 லட்சம், கடலுார் மங்கை விற்பனை நிலையத்திற்கு 30 லட்சம் ரூபாய் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி சிறப்பு தள்ளுபடி 30 சதவீத வசதியுடன் அனைத்து அரசு பணியாளர்களுக்கும் கடன் விற்பனை வசதி உள்ளது' என்றார்.
விழாவில், கோ- - ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் மாணிக்கம், துணை மண்டல மேலாளர் பிரேம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விற்பனை நிலைய மேலாளர் விமல்ராஜ், விஜய சங்கர் செய்திருந்தனர்.