/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மாநகர கவுன்சிலர்கள் அதிருப்தி கூடுதலாகும் எதிரணியினரின் 'பலம்'

ADDED : ஏப் 16, 2025 09:39 AM
கடலுார் மாநகராட்சியில் புதுநகர், முதுநகர் என 45 வார்டுகள் உள்ளன. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் அமைச்சர் அணி மேயருக்கு ஆதரவாகவும், எம்.எல்.ஏ., அணி மேயருக்கு எதிராகவும் செயல்பட்டு வந்தது.
அதன் பின்னர் இரு அணிகளையும் சமரசம் பேசி ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொண்டனர். தற்போது அமைச்சர் ஆதரவு கவுன்சிலர்களுக்குள் மீண்டும் பிரச்னை எழுந்துள்ளது. பெரும்பாலான கவுன்சிலர்கள் அதிருப்தியில் உள்ளனர். அதன் ஒரு பகுதியான நேற்று எம்.பி., நிதியில் மாநகரத்தில் 3 ரேஷன் கடை கட்ட அனுமதி கிடைத்துள்ளது. இது தொடர்பாக மேயர் குடும்பத்தினரிடம் கட்டுமான பணியினை கேட்டு கவுன்சிலர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த கவுன்சிலர் கடலுார் புதுநகரில் புகார் கொடுக்கும் வரை சென்றார். அப்போது, கடலுார் புதுநகர் போலீசார் அவரிடம் நீண்ட நேரம் சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளனர்.
மாநகராட்சியை பொறுத்தவரை அதிருப்தி கவுன்சிலர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரவே, ஆதரவு கவுன்சிலர்களின் எண்ணிக்கை பலம் கரைந்து வருகிறது.