/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உள்ளாட்சி தேர்தல் குறித்து உதவியாளர்களுக்கு அறிவுரை
/
உள்ளாட்சி தேர்தல் குறித்து உதவியாளர்களுக்கு அறிவுரை
உள்ளாட்சி தேர்தல் குறித்து உதவியாளர்களுக்கு அறிவுரை
உள்ளாட்சி தேர்தல் குறித்து உதவியாளர்களுக்கு அறிவுரை
ADDED : ஆக 01, 2011 02:51 AM
புவனகிரி : உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்துவது குறித்து ஊராட்சி உதவியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
மேல்புவனகிரி ஒன்றிய அலுவலகத்தில் கடலூர் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் பட்டாபிராமன் (தணிக்கை) தலைமையில் ஊராட்சி உதவியாளர்களுக்கான கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் தெரு விளக்குகள், குடிநீர் கிடைப்பதை முழுமையாக நிறைவேற்றுதல், ஊராட்சி நிர்வாக பதிவேடுகளை பராமரித்தல், உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்துதல் ஆகியன குறித்து விளக்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபால், கலையரசி,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன் (தணிக்கை), இப்ராகிம், குர்ஷித் பேகம், அசோக் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊராட்சி உதவியாளர் சசிகுமார் நன்றி கூறினார்.